| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:57.05 பி.ப GMT ] |
நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.
அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.
கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.
Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.
Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.
இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.
-TVS |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|