இணைய செய்தி
மொபைல் தேடலில் முதலிடத்தை பெறுமா கூகிள்?
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:54.33 மு.ப GMT ]
இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடுவதில் நமக்குப் பயன்படும் சர்ச் இஞ்சினை யார் முதலில் வடிவமைத்தார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டால் உடனே பெரும்பாலான வர்கள் கூகுள் நிறுவனம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.

ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் தன் சர்ச் இஞ்சினை வழங்கு முன்பே சர்ச் இஞ்சின் வேறு நிறுவனங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கூகுளின் வேகம், தேடல் வகை அதற்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளது.

இப்போது ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளப்படும் தேடலிலும் தான் முதல் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கூகுள் காய் நகர்த்துகிறது. அட்மாப் மற்றும் டெராசென்ட் (AdMob and Teracent) என்ற இரு நிறுவனங்களை அண்மையில் கூகுள் வாங்கியதன் மூலம் ஸ்மார்ட் போன் தேடலிலும் தன் இடத்தை வலுவாக கூகுள் அமைத்துள்ளது.

இன்டர்நெட் தேடலைப் பொறுத்தவரை கூகுள், சென்ற டிசம்பர் மாதம் மொத்த தேடலில் 70 சதவீதம் கொண்டிருந்தது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 13 கோடியே 10 லட்சம் தேடலில், 8 கோடியே 80 லட்சம் தேடல்கள் கூகுள் வழியே மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் கூடுதலாகும். இது கூகுள் பெரிய அளவிலான இடத்தைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இந்த பிரிவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதுதான். தன் நிலையை இன்னும் வலுவாக்க சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்களில் தேட விரும்புவர்கள், நேரடியாக கூகுள் தளத்திலேயே தங்கள் தேடலை மேற்கொள்ளலாம் என்பதுதான்.

கூகுள் தளத்திற்கு சவால் விடும் அளவிற்கு உள்ள ஒரு தேடுதளம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தான். ஆனால் இது பெயரளவில் தான் உள்ளது. ஏனென்றால் இந்த தேடல் சந்தையில் பிங் இஞ்சினின் பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ]
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.   [மேலும்]
வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] []
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்]
2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ]
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இ‌ன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ]
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்]
படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ]
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்]