மருத்துவ செய்தி
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 05:32.17 பி.ப GMT ]
தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்து விட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம். புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551 இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ. வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது புதிய மருந்து தயாரிக்க உதவுவதோடு உலக கண் மருத்துவத்துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆய்வாளர் பால் பெய்டு கூறும்போது “பொதுவாக பார்வையைப் பாதிப்பதில் ஜீன்களும் சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஜீன்களின் பங்கை அறிந்துவிட்டதால் அவற்றின் போக்கை திசைதிருப்பிவிடுவதன் மூலம் பார்வை பாதிப்பில் இருந்து விடுபட முடியும். இந்த முறையில் தற்போது தூரப்பார்வைக்கு மட்டுமே கண்ணாடி லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு காண முடியும்” என்றார்.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]