| | | |
| |
| | | |
| |
| மருத்துவ செய்தி |
| தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் ! |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 06:46.44 மு.ப GMT ] |
இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம், வைரம், வெள்ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது.
தங்கம், வெள்ளி, வைர நகைகளை இனி மறந்து விடுங்கள். விரைவில் வெளியாகவிருக்கும் புதிய வகை ஆபரணங்கள் உங்களை மேலும் ஜொலிக்க வைக்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தாய்ப்பாலில் இருந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள நகை தயாரிக்கும் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.
இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இந்தக் குழு 'பால் நெக்லஸ்'-களைத் தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .
பிரேஸ்லெட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்க இருப்பதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து (அசிட்டிக் அமிலம்) நன்கு கொதிக்க வைப்பதன் மூலம் பாலில் உள்ள கேசின் புரதம், இந்த கலவையை பிளாஸ்டிக் போன்று மாற்றி விடுகிறது. பின்னர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.
பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழகிய வடிவில் நகைகளாக மாற்றி விடுகிறார்களாம்.
தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இதுபோன்ற நகை வடிவமைப்பை அவர்கள் "பால் முத்து" (milk pearl), என்று குறிப்பிடுகிறார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.
என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம். |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ] |
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்] | | ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ] |
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்] | | திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ] |
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்] | | வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்' |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ] |
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்] | | உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ] |
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|