ஏனைய தொழிநுட்ப செய்தி
உயிர்காத்த வெப்கேம் காட்சி
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010, 05:49.58 பி.ப GMT ]
அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும்.  இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார்,
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது.

கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது.

இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரிய‌ன் ம‌றையும் நேர‌ம் நெருங்கிய‌துமே க‌ட‌ற்க‌ரையின் குண‌மே மாறிவிடும் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.

திடிரென‌ இருள் சூழ்ந்து க‌ட‌ற்க‌ரையே க‌ண்ணுக்கு புல‌ப்ப‌டாம‌ல் போய்விடுமாம். அதிலும் க‌ட‌ற்க‌ரை ப‌னியில் உறைய‌த்துவ‌ங்குவ‌தால் நில‌மை மேலும் சிக்க‌லாகி விடுமாம்.

என‌வே சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் மாலை நேர‌ங்க‌ளில் க‌ட‌ற்க‌ரையில் அதிக நேர‌ம் செல‌விட‌ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுவ‌தும் உண்டு.
ஆனால் சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌ அழகால் உந்தித‌ள்ள‌ப்ப‌டும் ப‌ல‌ர் ஆப‌த்தை பொருட்பாடுத்தாம‌ல் க‌ட‌ற்க‌ரையிலேயே காத்திருப்ப‌தும் உண்டு.

இப்ப‌டிதான‌ ச‌மீப‌த்தில் 40 வ‌ய‌து ம‌னித‌ர் ஒருவ‌ர் சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌த்தை ப்ட‌ம் எடுப்ப‌த‌ற்காக‌ காமிராவோடு காத்திருந்தார்.

அந்த‌ அற்புத‌ காட்சியை கிளிக் செய்துவிட்டாலும் அத‌ன் பிற‌கு உரைந்து கிட‌ந்த‌ ப‌னிக்க‌ட்டி மீது சிக்கி கொண்டார். அங்கிருந்த‌ பார்த்தால் க‌ட‌ற்க‌ரை க‌ண்ணில் ப‌ட‌வே இல்லை.ப‌த‌றிப்போன‌ ம‌னித‌ர் உத‌விக்கு த‌வித்திருக்கிறார். ஆனால் அருகாமையில் யாருமே இல்லாத்தால் மேலும் த‌வித்து க‌டைசியில் த‌ன‌து காமிராவை கொண்டு பிளாஷ் அடித்து உத‌விக்கு செய்கை செய்துள்ளார்.

வெளிச்ச‌ம் ம‌ங்க‌த்துவ‌ங்கி விட்ட‌ ஆள‌ற்ற‌ க‌ட‌ற்க‌ரையில் உயிருக்கு போராடும் ஒருவ‌ர் காமிராவில் பிளாஷ் அடிக்கும் காட்சி எப்ப‌டி இருந்திருக்கும் நினைத்துப்பாருங்க‌ள். அவ‌ர‌து அப‌ய‌க்குர‌ல் யார் காதிலும் விழாம‌லேயே போயிருக்கும்.

ஆனால் ந‌ல்ல‌ வேளையாக‌ பெண்ம‌ணி ஒருவ‌ர் த‌ன‌து வீட்டில் அம‌ர்ந்த‌ ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் மூல‌ம் அந்த‌ சூர்ய அஸ்த‌ம‌ன‌க்காட்சியை க‌ண்டு க‌ளித்துக்கொண்டிருந்தார். ந‌க‌ர‌ நிர்வாக‌ம் வெப்கேம் மூல‌ம் க‌ட‌ற்க‌ரை காட்சியை ப‌திவு செய்து இண்ட்நெர்நெட் வ‌ழியே க‌ண‌ச்செய்து வ‌ருகிற‌து.

சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌ அழ‌கில் மூழ்கியிருந்த‌ அந்த‌ பெண்ம‌ணி காமிரா பிளாஷ் வெளிச்ச‌ம் மீன்னுவ‌தை பார்த்து யாரோ அப‌ய‌க்குர‌ல் கொடுப்ப‌தை புரிந்து கொண்டு உட‌னே அதிகாரிக‌ளூக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார்.

அதிகாரிகளும் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ள‌ன‌ர்.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]