| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| பூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்? |
| [ சனிக்கிழமை, 17 யூலை 2010, 07:31.51 பி.ப GMT ] |
பூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா? குறையுமா? வெப்பமாக இருக்குமா? குளிர்ச்சியாக இருக்குமா? பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே! இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்பமும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத்துக்குக் காரணம். பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.
பூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’. |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ] |
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
[மேலும்] | | வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம் |
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] [ ] |
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்] | | 2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ] |
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] | | குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது! |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ] |
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்] | | படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ] |
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|