| | | |
| |
| | | |
| |
| பாதுகாப்பு செய்தி |
| கணினியும் கண்ணும் |
| [ வெள்ளிக்கிழமை, 11 டிசெம்பர் 2009, 06:10.59 பி.ப GMT ] |
அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.
அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.
கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.
பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.
கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.
கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும். |
 |
|
| | | |
|
| | | |
| |
Apple's iPhone |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ] |
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்] | | ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ] |
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்] | | திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ] |
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்] | | வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்' |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ] |
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்] | | உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ] |
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|