மென்பொருள் செய்தி
பக்னரால் உற்சாகமடைந்துள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள்
[ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2009, 05:50.53 மு.ப GMT ]
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் நடுவர்களின் மோசமான தீர்ப்புகளால் அந்தப் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாகியதுடன் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கிரிக்கெட் போட்டிகளை மேலும் நியாயமான முறையில் நடத்தப் பயன்படும் மென்பொருட்களை தயாரிப்பதில் உற்சாகமடைந்துள்ளன.

கிரிக்கெட் சாதனைகளை ஒப்பு நோக்குகையில், மென்பொருள் துறையில் சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் சில ஏற்கனவே இந்த தயாரிப்புகளில் களமிறங்கியுள்ளன.

நடுவர் தவறுகளை தங்கள் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளாக மாற்ற முயல்கின்றன இந்த நிறுவனங்கள்.

மிகப்பெரிய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் சில கிரிக்கெட் ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் மென்பொருள் ரீதியாக படம் பிடித்து தீர்ப்புகளை அவ்வப்போதே விரைவாக வழங்கும் விதமான மென்பொருட்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் வீரர் விஜய் பரத்வாஜ் இன்னொருவருடன் இணைந்து துவங்கிய ஸ்வாந்தா சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மேம்பாட்டு மேலாளர் ராஸ் டர்னரிடம் நடுவர் தீர்ப்புகள் தொடர்பான 3வது கண் என்ற ஒரு மென்பொருள் தீர்வுகளை வழங்கியுள்ளது.

இந்த மென்பொருள் எப்படி செயல்படும் என்பது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு விளக்கப்பட்டுள்ளது. ஆஸி வாரியத்தின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

"MsN"

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]