| பத்து ஆண்டுகளுக்கு முன் 21 விதமான மைக்ரோசாஃப்ட் புரோகிராம்கள் உலகம் முழுதும் புழக்கத்திற்கு வந்தன.உடனேயே 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கணினிகளில் சட்டவிரோத விண்டோஸ் மற்றும் ஆஃபீஸ் நகல்கள் குடிபுகுந்தன. இதனால் அந்த கணினிகளுக்கு வைரஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்பட்டதாக மைக்ரோசாஃப்ட் எச்சரித்திருந்தது.
2001-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சுங்கத் துறையினர் அமெரிக்காவிற்கு வந்த ஒரு ஷிப்பிங் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது 100 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய திருட்டு மென்பொருட்களும் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் 31,000 நகல்களும் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு மைக்ரோசாஃட் தனது விசாரணையை 22 நாடுகளின் பக்கம் முடுக்கி விட்டது. உள்நாட்டு சட்டட் அமலாக்கப் பிரிவினர் கடுமையாக அதிரடி சோதனைகளை மேற்கொண்டு மென்பொருள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டுகளுக்காக சிலரை கைதும் செய்தனர்.
தைவான் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் இது தொடர்பான வழக்கில் முக்கியமான தண்டனை தீர்ப்பு ஒன்றையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின் மூலம் கைப்பற்றப்பட்ட திருட்டு மென்பொருள்களின் சில்லரை விற்பனை மதிப்பு 900 மில்லியன் டாலர்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த கண்டுபிடிப்புகளினால் திருட்டு மென்பொருள் நடவடிக்கைகள் குறைந்து விடாது என்று கூறிய மைக்ரோசாஃப்ட், இது ஒரு துவக்கமே என்று கூறியுள்ளது. ஆனால் இனிமேல் மென்பொருள் திருட்டை நடத்துபவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.
ஆனால் நகல்கள் உண்மையில் அசல் போலவே இருந்தது என்றும், அதனை நகல்கல் என்பதை உறுதி செய்ய ஏகப்பட்ட விஞ்ஞான, தடய அறிவியல்களை பயன்படுத்த நேரிட்டது என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் ஃபின் தெரிவித்துள்ளார்.
மென்பொருள் திருட்டு விற்பனையை கண்டுபிடிக்க 80 உறுப்பினர்கள் கொண்ட குழு, உலகம் முழுதும் நியமிக்கப்பட்டது. இவர்கள் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பரிசோதனை முயற்சியாக சில டிஸ்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் கறுப்புச் சந்தை விநியோக சங்கிலித் தொடர் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த வழக்கறிஞர் கூறுகிறார்.
தைபே நகர காவல்துறையினர் சின்வே டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டு 126 மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்ட விரோத மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 2001ல் ஏற்கனவே தைவான் நீதித்துறை அமைச்சகத்தினர் சுங்டெக் நிறுவனத்தை சோதனை செய்து 100 மில்லியன் டாலர் திருட்டு டிஸ்குகளை பறிமுதல் செய்தனர்.
கடைசியாக 2007ம் ஆண்டு சுங்டெக் மற்றும் சின்வே நிறுவனங்களின் உரிமையாளரை கைது செய்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த திருட்டு சமாச்சாரங்களை விநியோகித்தவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சீனாவில் பொதுப் பாதுகாப்புக் கழகத்தினர் ஷாங் ஷெங் என்ற ஷிப்பிங் நிறுவனத்தை ரெய்டு செய்து அதன் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த அதிரடி சோதனையின் விளைவாக அமெரிக்காவில் 35 பேர் உட்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இதில் தைவான் போலிகளை விற்ற லிசா சென் என்பவர் அகப்பட்டுக் கொண்டபோது, 2002ம் ஆண்டு அவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி நடவடிக்கைகள் ஒரு துவக்கம்தான் இன்னமும் கூட மைக்ரோசாஃப்டின் சமீபத்திய மென்பொருட்களின் சட்ட விரோத நகலகள் புழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன, ஒரு நிமிடம் கூட இந்த விவகாரத்தில் கடைசி அத்தியாயம் எழுதப்ப்ட்டு விட்டதாய் தன்னால் யோசிக்க முடியாது என்கிறார் வழக்கறிஞர் டேவிட் ஃபின்.
"MsN" |